Posts

Showing posts from October, 2020

சிவகாமியின் சபதம் | பாகம் 1 | அத்தியாயம் 2 | Sivagaamiyin Sabatham | Part 1 | Chapter 2

Image
பாகம் - 1  அத்தியாயம் - 2  |  தலைநகரம்     அமரர் கல்கியின் அற்புதமான படைப்பாகிய சிவகாமியின் சபதம் நாவலை அனைவரிடமும்  கொண்டு சேர்க்கும் முயற்சி தான் இந்த பதிவு.  இந்த பதிவின் காணொளியைப் பார்க்க :   Sivagamiyin sabatham | Part 1 | Chapter 2       For video click the link :   Sivagamiyin sabatham | Part 1 | Chapter 2   கோ ட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. நமது பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து ஒன்று வலப்புறமாகவும் ஒன்று இடப்புறமாகவும் கோட்டை மதிலைச் சுற்றி அகழிக் கரையோடு சென்றது. சாலையோடு வந்த வண்டிகளும், மனிதர்களும் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ மதிலைச் சுற்றிக் கொண்டு போனார்கள். அகழியின் மேல் ஒரு குறுகலான மரப்பாலம் காணப்பட்டது. அது கோட்டை வாசல் வரை சென்றது. புத்த பிக்ஷு பரஞ்சோதிக்குச் சைகை காட்டிவிட்டு அந்தப் பாலத்தின்மேல் நடந்து சென...

சிவகாமியின் சபதம் | பாகம் 1 | அத்தியாயம் 1 | Sivagaamiyin Sabatham | Part 1 | Chapter 1

Image
     பாகம் - 1  அத்தியாயம் - 1  |  பிரயாணிகள்    அமரர் கல்கியின் அற்புதமான படைப்பாகிய சிவகாமியின் சபதம் நாவலை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சி தான் இந்த பதிவு.  இந்த பதிவின் காணொளியைப் பார்க்க :   Sivagamiyin sabatham | Part 1 | Chapter 1       For video click the link :   Sivagamiyin sabatham | Part 1 | Chapter 1      இ ளவேனிற் காலத்தில் ஒருநாள் மாலை மகேந்திர தடாகத்தின் கரை வழியாகச் சென்ற இராஜபாட்டையில்  பிரயாணிகள் இ ருவர் காஞ்சி மாநகரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஆறடி உயரத்துக்கு மேல் வளர்ந்திருந்த ஆஜானுபாகு. காவி வஸ்திரம் தரித்த பௌத்த சந்நியாசி. கடுமையான தவ விரத அனுஷ்டானங்களினாலோ, வேறு கடினமான காரியங்களில் ஈடுபட்டதனாலோ,அந்தப் புத்த பிக்ஷுவின் தேகமானது வறண்டு கெட்டிப்பட்டுக் கடினமாகியிருந்தது. அவருடைய முகத் தோற்றமானது அன்பையோ, பக்தியையோ உண்டாக்குவதாய் இல்லை.   ஒருவித அச்சத்தை ஊட்டுவதாய் இருந்தது.      இன்னொரு பிரயாணி கட்டமைந்த...