சிவகாமியின் சபதம் | பாகம் 1 | அத்தியாயம் 2 | Sivagaamiyin Sabatham | Part 1 | Chapter 2
பாகம் - 1 அத்தியாயம் - 2 | தலைநகரம் அமரர் கல்கியின் அற்புதமான படைப்பாகிய சிவகாமியின் சபதம் நாவலை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சி தான் இந்த பதிவு. இந்த பதிவின் காணொளியைப் பார்க்க : Sivagamiyin sabatham | Part 1 | Chapter 2 For video click the link : Sivagamiyin sabatham | Part 1 | Chapter 2 கோ ட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. நமது பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து ஒன்று வலப்புறமாகவும் ஒன்று இடப்புறமாகவும் கோட்டை மதிலைச் சுற்றி அகழிக் கரையோடு சென்றது. சாலையோடு வந்த வண்டிகளும், மனிதர்களும் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ மதிலைச் சுற்றிக் கொண்டு போனார்கள். அகழியின் மேல் ஒரு குறுகலான மரப்பாலம் காணப்பட்டது. அது கோட்டை வாசல் வரை சென்றது. புத்த பிக்ஷு பரஞ்சோதிக்குச் சைகை காட்டிவிட்டு அந்தப் பாலத்தின்மேல் நடந்து சென...